Local

கொழும்பில் உள்ள ஆறு ஊடகவியலாளர்களுக்கு கொரோனா வைரஸ்?

கொழும்பில் இயங்கிவரும் இரண்டு பிரதான ஊடகங்களைச் சேர்ந்த 6 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த 6 ஊடகவியலாளர்கள் உட்பட 8 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விஜய நியூஸ் பெப்பர் மற்றும் மவ்பிம ஆகியவற்றில் கடமையாற்றும் இரண்டு ஊடகவியலாளர்களும், நான்கு புகைப்பட ஊடகவியலாளர்களும், அவர்கள் பயணித்த வாகனத்தின் இரண்டு சாரதிகளுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

களுத்துரை அட்டுளுகம பகுதிக்குள் சென்று செய்தி சேகரித்தமையே, தனிமைப்படுத்தப்பட்டுள்ளமைக்கான காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாரதிகள் இருவரும் நிறுவனங்களுக்கு சொந்தமான வீடொன்றிலும், ஏனையோர் தமது வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைகப்பட்டுள்ளதாகவும் மெலும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading