Local

கொழும்பில் கோடீஸ்வர யாசகர் கைது!

கொழும்பில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட யாகசர் கோடீஸ்வரர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த நபருக்கு இரண்டு மாடியில் சொகுசு பங்களா மற்றும் மூன்று சொகுசு கார்கள் உள்ளமை விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தனது வீட்டின் மேல் மாடியை மாதம் 30 ஆயிரம் ரூபாவுக்கு மாதாந்த வாடகை அடிப்படையில் வழங்கியுள்ளார். பிச்சை எடுப்பது மூலம் தினமும் 5000 ரூபா பணம் அவர் சம்பாதிப்பதாக பொலிஸ் விசாரைணையில் தெரியவந்துள்ளது.
கொழும்பு ஜம்பட்டா வீதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், குறித்த யாசகர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இதன்போது மேற்கொண்ட விசாரணைகளில் அவர் கோடீஸ்வரர் என்ற விபரங்கள் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading