Local

கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் 12 தாய்மார்கள் 20 குழந்தைகளுக்கு கொரோனா!

கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் 12 தாய்மார்களும் 20 குழந்தைகளும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மருத்துவமனையின் இயக்குநர் விஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி மருத்துவமனையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.ஆனால் வைத்தியருக்கு தமது வைத்தியசாலையிலிருந்து கொரோனா தொற்றவில்லை என விஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மருத்துவருடன் தொடர்பிலிருந்த இரு மருத்துவர்களை தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ,மக்கள் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவதற்கு அச்சப்படதேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர் எந்தவித தடங்கலுமின்றி மருத்துவ சேவை தொடர்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading