கோத்தபாய போன்ற சர்வாதிகாரி நாட்டிற்கு தேவை இந்திக தெரிவிப்பு!

இலங்கைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போன்ற சர்வாதிகாரி தேவை என இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அனுருத்த, நாடாளுமன்ற உறுப்பினராக, தாம் சர்வாதிகாரத்தை ஆதரிப்பதாக கூறினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சர்வாதிகாரத்தை தனிப்பட்ட முறையில் விரும்புவதாக அவர் தெரிவித்தார். சர்வாதிகாரம் நாட்டின் பல பிரச்சினைகளை தீர்க்க உதவியது என்று அமைச்சர் கூறினார்.
எதிர்க்கட்சிகள் கடந்த காலத்தில் கோட்டாபய ராஜபக்சவை ஒரு சர்வாதிகாரியாக சித்தரித்ததாகவும், இப்போது கூட அதை உணர்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
