Local

கோமாளி ஹரின் இராஜினாமா செய்வதாக அறிவிப்பு!

இன்று (23) இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தில், 21ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான யோசனை முன்வைக்கப்படாவிட்டால் தாம் அமைச்சுப் பதவியிலிருந்து இன்றிரவே இராஜினாமா செய்வதாக, அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரான, ஹரீன் பெனாண்டோ கடந்த வெள்ளிக்கிழமை (20) ஜனாதிபதி முன்னிலையில் சுற்றுலா மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டை நிலையானதாக மாற்றி, மீண்டும் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமாயின், 21ஆவது திருத்தம் முன்வைக்கப்பட வேண்டுமென அவர் இதன்போது செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜனாதிபதிக்கு எதிராகக் குரல்கொடுக்கும் மக்களின் அழைப்பான அரசியலமைப்புக்கான 21ஆம் திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பார்கள் என தாம் நம்புவதாக ஹரின் பெனாண்டோ தெரிவித்தார்.

இதேவேளை, உணவு, எரிபொருள் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு இப்போதே தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து பின்னர் கலந்துரையாடப்பட வேண்டுமென ஸ் ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading