Local

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!

தம்புத்தேகம ஏரியாகம பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

லொறியுடன் வேன் ஒன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த நால்வரும் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தனர்.

விபத்தில் காயமடைந்த மேலும் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

குருநாகலிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த லொறி ஒன்று கடையொன்றிற்கு அருகில் நிறுத்தச் சென்ற போது, ​​அதே திசையில் பயணித்த வேன் அதன் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த வேனில் கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 08 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் ஒருவரும் 11 வயது மற்றும் 06 வயதுடைய இரு சிறுவர்கள் மற்றும் 8 வயது சிறுமி ஒருவரும் தம்புத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேன் சாரதியின் கவனக்குறைவு மற்றும் அதீத வேகம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading