Local

கோர விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு!

வெல்லவாய – தனமல்வில வீதியின் நுகயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு  கெப் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 44 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள், 42 வயதான அவரின் மனைவி மற்றும் 70 வயதான தந்தை ஆகியோரோ உயிரிழந்துள்ளனர்.

இதன்போது காயமடைந்த சிறுவனொருவன் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கெப் சாரதி மது போதையில் இருந்துள்ளதுடன், அவரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

கெப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading