LocalUp Country

கோவிலை உடைத்து அம்மனின் தாலி திருட்டு! பத்தனையில் கொடூரம்

கோவிலை  உடைத்து உள்ளே புகுந்த திருட்டுக்கும்பல், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தாலியை களவாடிச்சென்ற சம்பவம்  இன்று (14) மேபீல்ட் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேலீல்ட் தோட்ட சாமஸ் பிரிவிலுள்ள ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலேயே அதிகாலைவேளையில் இவ்வாறு கைவரிசைக்காட்டப்பட்டுள்ளது.

2018 ஏப்ரல் 20 ஆம் திகதி இவ்வாலயத்தில்  கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன்போது அம்மனுக்கு தங்க தாலி அணிவிக்கப்பட்டடது. இத்தாலியே களவாடப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பத்தனை பொலிஸாரும், நுவரெலியா பொலிஸ் குற்ற தடுப்பு  பிரிவினரும் ஆலயத்துக்குசென்று, விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. பலகோணங்களில் விசாரணை தொடர்கின்றது.

க.கிசாந்தனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading