Local

சஜித் பிரேமதாசவிடம் கையேந்தும் ரணில்

சஜித்தின் முன்னேற்றத்திற்குத் தடையாகத் தினமும் கைங்கரியங்கள் மேற்கொண்டுவரும் ரணில் விக்கிரமசிங்க, இன்னும் சிறுதுகாலம் அரசியலில் தான் நின்று பிடிப்பதற்கு இடமளிக்குமாறும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசியப்பட்டியலிலிருந்து குறைந்தளவு தனக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் இரண்டினைப் பெற்றுக் கொள்வதற்கு உதவுமாறும் சஜித் பிரேமதாசவிடம் விநயமாக வேண்டிள்ளார்.
நேற்றுப் பிற்பகல் கபீர் ஹாஷிம் அவர்களை அவர்களைச் சந்தித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி இதனை சஜித் பிரேமதாசவுக்கு எத்திவைக்குமாறு கோரியுள்ளார் எனத் தெரியவருகின்றது.
கபீர் ஹாஷிமைச் சந்தித்து உறயாடியபோது, ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாசவுக்கு காதில் பூ சுத்துவது போல ஒரு விடயத்தையும் கூறுமாறு பணித்துள்ளார். புதிதாக உருவாக்கப்படவுள்ள கூட்டணியின் தலைமைப் பதவியை சஜித்திற்கு வழங்க முடியும் எனவும், அந்தக் கூட்டணியின் செயலாளர் பதவியைக்கூட சஜித் ஆதரவு அணியில் ஒருவருக்கு வழங்க முடியும் எனவும் கூறியுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading