சந்திரன் உடைந்து கொண்டே இருக்கிறதா?
முன்பு சந்திரன் ஒரு செயல்பாடற்ற, “இறந்த” உலகம் என்று விஞ்ஞானிகள் கருதினார்கள். ஆனால், சமீபத்திய புகைப்படங்களும் தரவுகளும் சந்திரன் இன்னும் மெதுவாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
சந்திரன் அதன் உட்பகுதியிலிருந்து மெதுவாகக் குளிர்ந்து சுருங்குகிறது.
இவ்வாறு சுருங்கும்போது, அதன் வெளிப்புறத் தரைப்பகுதி மடிந்து, உடைந்து, சிறிய குன்றுகள் மற்றும் பிளவுகளை உருவாக்குகிறது. இந்தச் சிறிய குன்றுகளை அறிவியல் ரீதியாக “லோபேட் ஸ்கார்ப்ஸ்” (Lobate Scarps) என்று அழைக்கிறார்கள்.
சந்திரனில் காணப்படும் சில பிளவுகள் சமீப காலத்தில் உருவானவை.
சில பிளவுகள், விண்கற்கள் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளங்களுக்கு மேலே காணப்படுகின்றன. இது, அந்தப் பள்ளங்கள் உருவான பிறகுதான் இந்த மாற்றங்கள் நடந்துள்ளன என்பதைக் காட்டுகிறது.
இந்த சுருங்கும் இயக்கத்தினால் சந்திரனில் சிறிய நிலநடுக்கங்கள் (Moonquakes) ஏற்படுகின்றன. இவை பூமியில் ஏற்படும் நிலநடுக்கங்களை விடப் பலவீனமானவை என்றாலும், சந்திரனுக்குள் இன்னும் இயக்கம் இருப்பதை இவை நிரூபிக்கின்றன.
எதிர்காலத்தில் மனிதர்கள் சந்திரனுக்குச் செல்லும்போது, எந்த இடங்கள் பாதுகாப்பானவை என்பதைத் தீர்மானிக்கவும், முக்கியமான ஆராய்ச்சி இடங்களைக் கண்டறியவும் இந்தத் தகவல்கள் மிகவும் உதவும்.
பூமியிலிருந்து பார்க்கும்போது சந்திரன் அமைதியாகத் தெரிந்தாலும், உண்மையில் அது மெதுவாக உடைந்து, நகர்ந்து, தன்னைத் தானே மாற்றிக் கொண்டே இருக்கிறது.
இவை அனைத்தையும் வாசிக்கும் போது “(உலக அழிவு) நேரம் நெருங்கிவிட்டது; சந்திரனும் பிளந்து விட்டது. என்ற வசனம் நினைவில் வரக்கூடும். வசனம் (54:1-2)

You must be logged in to post a comment.