Local

சபையில் அடிதடி – சபாநாயகர் இன்று விசேட அறிவிப்பு!

பெரும் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடிவுள்ளது.

நாடாளுமன்றம் நேற்றுகூடியவேளை, சபைக்குள் கடும் மோதல் ஏற்பட்டது. எம்.பிக்கள் வன்முறையாளர்களாக மாறியதால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையிலேயே சபை இன்று கூடவுள்ளது. சபாநாயகர் கருஜயசூரியவால் நேற்றைய சம்பவம் தொடர்பில் விசேட அறிவிப்பு விடுக்கப்படவுள்ளது. கட்சித் தலைவர்களும் அது குறித்து கருத்து வெளியிடுவார்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, இலங்கையின் பிரதமர் யார் என்ற குழப்பம் நீடித்துவரும் நிலையில், இன்று அப்பிரச்சினைக்கு முடிவு காணும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading