World

சர்வதேச சட்டத்தை மீறிய அமெரிக்கா…! கொத்தளித்த சீனா

அமெரிக்காவிற்கு எதிராக சீனா கண்டனம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, மற்ற நாடுகளின் கப்பல்களை தன்னிச்சையாகக் கைப்பற்றும் அமெரிக்காவின் நடைமுறை சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறுகின்றது என சீனா தெரிவித்துள்ளது.

வெனிசுலாவில் இருந்து சீனாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு சென்ற கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது.

கடும் கண்டனம்

இந்தநிலையில், குறித்த விடயத்திற்கு சீனா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டத்தை மீறிய அமெரிக்கா...! கொத்தளித்த சீனா | China Slams Us Seizure Of Venezuela Tanker Row

இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பிற நாடுகளின் கப்பல்களைத் தன்னிச்சையாகப் பறிமுதல் செய்வதன் மூலம் அமெரிக்கா சர்வதேசச் சட்டத்தை கடுமையாக மீறியுள்ளது.

சபையின் அங்கீகாரம்

சர்வதேசச் சட்டத்தில் அடிப்படையற்ற அல்லது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அங்கீகாரம் இல்லாத அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச சட்டவிரோதத் தடைகளுக்கு எதிராகவும் பிற நாடுகளின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிராகவும் சீனா நிற்கின்றது.

சர்வதேச சட்டத்தை மீறிய அமெரிக்கா...! கொத்தளித்த சீனா | China Slams Us Seizure Of Venezuela Tanker Row

வெனிசுலாவுக்கு மற்ற நாடுகளுடன் பரஸ்பர நன்மை பயக்கும் உறவை வளர்த்துக்கொள்ளும் உரிமை உண்டு.

தனது நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் வெனிசுலாவின் நிலைப்பாட்டிற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு உண்டு என்று நாங்கள் நம்புகின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading