World

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் பதிவாகும் மாற்றம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்றைய (25) விலையுடன் ஒப்பிடும்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

அதன்படி, WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 91.39 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

மசகு எண்ணெய் விலை

ப்ரெண்ட் வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 103.3 டொலர்கள் அதிகரித்துள்ளது.

ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு! சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் பதிவாகும் மாற்றம் | Crude Oil Prices In The World Market Increase

மேலும் மர்பன் வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.4 டொலர்களாக காணப்படுகிறது. முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் மர்பன் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, இது முந்தைய விலையுடன் ஒப்பிடும்போது 14.52% குறைவு என்று வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.

 ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த முடிவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 5 நாட்களுக்கு ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்ததைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலைகள் சரிந்தன.

தற்போது, ​​மத்திய கிழக்கில் போர் நிலவுவது தொடர்பான நிச்சயமற்ற தன்மையால் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்ந்து வருகின்றன.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading