Local

சர்வதேச நாடுகளை அதிரவைத்த புகைப்படம்!

மியான்மரின் ரக்கினே மாநிலத்தில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவ ஆட்சிக்கு நிகரான அடக்குமுறைகள் தொடர்ந்த நிலையில், மியான்மரில் வசித்து வந்த லட்சக்கணக்கான ரோஹிங்யா மக்கள், அங்கிருந்து வெளியேறுகின்றனர்.

மியான்மர் ராணுவத்தினர், ரோஹிங்யா மக்கள் வசிக்கும் கிராமங்களைத் தீயிட்டுக் கொழுத்துவதால், உடைமைகளை இழந்து உயிருக்கு அஞ்சி, அவர்கள் அண்டை நாடுகளில் இவ்வாறு தஞ்சமடைந்து வருகின்றனர்.

மியான்மரில் இருந்து நஷீர் அகமது என்பவர் மனைவி ஹமீதா மற்றும் இரு குழந்தைகளுடன் படகில் வங்தேசத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். படகில் மேலும் 18 பேர் இருந்தனர்.

படகு கரையை எட்டுகையில் அலையில் சிக்கி நிலைகுலைந்தது. இதில், ஹமீதாவின் கையில் இருந்த பிறந்து 40 நாள்களே ஆன குழந்தை, தண்ணீருக்குள் விழுந்து பரிதாபமாக இறந்தது. இறந்துபோன கைக்குழந்தையுடன் தாயும் தந்தையும் தவித்துநின்ற காட்சியை, ராய்ட்டர்ஸ் புகைப்படக் கலைஞர் முகமது ஹுசைன் பதிவு செய்துள்ளார்.

இந்தப் புகைப்படம், சர்வதேச நாடுகளை அதிரவைத்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading