சர்வதேச வர்த்தக மையமாக மாறுகிறது இலங்கை…!!!
இந்தியாவில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘ரைசினா கலந்துரையாடலில்’ கலந்து கொண்ட இலங்கை அமைச்சர் விஜித ஹேரத், ORF அமைப்பின் தலைவர் சஞ்சய் ஜோஷிக்கு வழங்கிய நேர்காணலின் போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் முதலீட்டுச் சூழல் குறித்து முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இலங்கையில் ஊழலுக்கு எதிராகப் பூச்சிய சகிப்புத்தன்மையைக் (Zero Corruption Tolerance) கொண்ட புதிய அரசாங்கம் அமைந்துள்ளதால், நாடு சர்வதேச வர்த்தக மையமாக (International Trade Hub) உருவெடுத்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
முதலீட்டுச் செயல்பாடுகளை விரைவுபடுத்தவும், அதிகாரத்துவத் தாமதங்களைக் குறைக்கவும் ‘ஒற்றைச் சாளர முறை’ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான முதலீட்டுச் சூழல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.