Uncategorized

சவப்பெட்டிகளில் அனுப்பிவைக்கப்பட்ட இஸ்ரேலிய வீரர்கள்!!!

ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசேனை படுகொலை செய்ய களமிறங்கிய இஸ்ரேலின் மொசாட் வீரர்கள் இறுதியில் சவப்பெட்டிகளில் அனுப்பிவைக்கப்பட்டனர்.

ஆபரேஷன் Bramble Bush

ஈரானின் உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனிக்கு தற்போது இஸ்ரேலும் ட்ரம்ப் நிர்வாகமும் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. காமெனியை படுகொலை செய்தால் மட்டுமே ஈரானுக்கு விடிவு காலம் என்றும் இஸ்ரேல் கூறி வருகிறது.

சதாமிடம் தோற்றுப்போன மொசாட்... சவப்பெட்டிகளில் அனுப்பிவைக்கப்பட்ட இஸ்ரேலிய வீரர்கள் | Saddam Plot Failed Israeli Soldiers In Coffins

ஆனால் 1990களின் தொடக்கத்தில் ஆபரேஷன் Bramble Bush என ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசேனை படுகொலை செய்ய களமிறங்கிய இஸ்ரேலின் மொசாட் வீரர்கள் இறுதியில் சவப்பெட்டிகளில் அனுப்பிவைக்கப்பட்டனர்.

1991 வளைகுடாப் போருக்குப் பிறகு, சதாமை ஒரு ஆபத்தான மற்றும் கணிக்க முடியாத அச்சுறுத்தலாக இஸ்ரேல் கருதியது. வளைகுடாப் போரில் இஸ்ரேல் களமிறங்காவிட்டாலும், ஈராக்கில் இருந்து பல ஸ்கட் ஏவுகணைத் தாக்குதல்களைச் சந்தித்தது.

சதாம் பேரழிவு ஆயுதங்களை உருவாக்கி வருவதாக அமெரிக்க உளவுத்துறை கூறியது. அது உண்மைக்கு புறம்பானது என பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க உளவுத்துறையே ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில் அச்சுறுத்தலை ஒழிக்கத் தீர்மானித்த இஸ்ரேலிய இராணுவம் மற்றும் உளவுத்துறை, ஒரு பொது நிகழ்வில் சதாமை படுகொலை செய்வதற்கான ஒரு திட்டத்தை வடிவமைத்தனர்.

சதாமிடம் தோற்றுப்போன மொசாட்... சவப்பெட்டிகளில் அனுப்பிவைக்கப்பட்ட இஸ்ரேலிய வீரர்கள் | Saddam Plot Failed Israeli Soldiers In Coffins

இஸ்ரேலின் மிகத்திறமையான Sayeret Matkal படை இந்தத் திட்டத்தை செயல்படுத்த களமிறக்கப்பட்டது. சதாமின் சொந்த ஊரான திக்ரித்தில் நடந்த ஒரு இறுதிச் சடங்கில் அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அரேபியர்கள் போல் வேடமிட்டு இஸ்ரேலிய கமாண்டோக்கள் ஊடுருவினர்.

நவம்பர் 5, 1992 அன்று, Sayeret Matkal குழு நெகேவ் பாலைவனத்தில் ஒரு நேரடி ஒத்திகையை மேற்கொள்ள ஒன்று கூடியது. பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டவை என்ற அனுமானத்தின் கீழ், அவர்கள் நேரடி ஏவுகணைகளைப் பயன்படுத்தினர்.

சதாமிடம் தோற்றுப்போன மொசாட்... சவப்பெட்டிகளில் அனுப்பிவைக்கப்பட்ட இஸ்ரேலிய வீரர்கள் | Saddam Plot Failed Israeli Soldiers In Coffins

ஒத்திகையின் போது ​​செயல்பாட்டாளர்களில் ஒருவர் தவறுதலாக தனது சொந்த அணியை நோக்கி ஒரு உண்மையான ஏவுகணையை ஏவினார், இதனால் ஐந்து கமாண்டோக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் படுகாயமடைந்தனர். எதிர்பாராத இந்த அசம்பாவிதத்தை அடுத்து, திட்டம் உடனடியாகக் கைவிடப்பட்டது.

விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் கண்டறியப்பட்டன. மேலும், நெகேவ் பாலைவனத்தில் பலியான கமாண்டோக்கள் தொடர்பான தகவல்கள் பல ஆண்டுகள் ரகசியமாக வைக்கப்பட்டது.

சதாமிடம் தோற்றுப்போன மொசாட்... சவப்பெட்டிகளில் அனுப்பிவைக்கப்பட்ட இஸ்ரேலிய வீரர்கள் | Saddam Plot Failed Israeli Soldiers In Coffins

தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை மற்றொரு நாட்டின் உயர்மட்டத் தலைவரை குறிவைக்கிறது. காஸாவில் ஹமாஸ் படைகளின் தலைவர்கள் பலரை துல்லியமாகத் தாக்கி படுகொலை செய்துள்ள இஸ்ரேல், சமீபத்தில் ஈரானின் சக்திவாய்ந்த தலைவர்கள் சிலரை படுகொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading