சவூதி, இந்திய அணிகள் சம்பியன்…!!!
டிப்ளோமடிக் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த கால்பந்து போட்டியில் சவுதி அரேபியாவும் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் சம்பியன் பட்டத்தை வென்றன.
டிப்ளோமடிக் விளையாட்டு கழக தலைவர் சலீம் சிராஜ் மற்றும் அவரது குழுவினால் ஏற்பாடு செய்த இந்தப் போட்டி கொலன்னாவை உமாகிலியா மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதில் சவுதி அரேபியா, இந்தியா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அரபு இராச்சியம், குவைட், சுவிட்சர்லாந்து, ஓமான், கனடா, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, மாலைதீவு மற்றும் கட்டார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகளுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளின் அணிகளும் பங்கேற்றன.
இதன்போது கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஐ.நா. அணியை தோற்கடித்ததோடு கால்பந்து இறுதிப் போட்டியில் சவூதி அணி இந்தியவை வீழ்த்தியது.
சம்பியன் அணியினர் Expo Leisure Cluster பணிப்பாளர் சப்ரி பஹாவுத்தீன் மற்றும் ஜே.ஜே. அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஐ.வை.எம். ஹனிப் ஆகியோரிடமிருந்து கிண்ணத்தை பெற்றனர்.

You must be logged in to post a comment.