சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ‘புனித புஹாரி செரீப்’ பாராயணம் ஆரம்பித்து வைப்பு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் பாரம்பரியமாக இடம்பெற்றுவரும் ‘புனித புஹாரி செரீப்’ பாராயணம் இன்று (02) வியாழக்கிழமை அதிகாலை இப்பள்ளிவாசலின் பேஷ் இமாம் எம்.ஐ.ஆதம்பாவா (ரஷாதி)யினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பொறுப்பாளர் சபையின் பிரதித் தலைவர் எம்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில், சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மரைக்காயர்மார்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், ஜமாஅத்தினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.