Gossip

சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் மோசமாக நடந்து கொண்ட வைத்தியர்!

கோவாவில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் மருத்துவர் ஒருவர் முகம்சுழிக்கும் விதமாக நடந்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவா மாநிலம் மபுசா பகுதியில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக விளங்கும் பிரபல மருத்துவர் ஒருவர் தனியாக கிளினிக் நடத்தி வருகின்றார்.

இவரிடம் பெண் ஒருவர் இடுப்பு வலி காரணமாக சிகிச்சைக்கு வந்துள்ளார். உதவியாளர் யாரும் இல்லாத நிலையில் மருத்துவர் உள்ளே அழைத்து படுக்கையில் படுக்க கோரியுள்ளார்.

பின்பு, அப்பெண் அணிந்திருந்த ட்ரவுசரை மருத்துவர் கழிற்றியுள்ளார். பரிசோதனைக்காக இவ்வாறு செய்வதாக நினைத்த அப்பெண்ணிற்கு சிறிது நேரத்தில் பாரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஆம் குறித்த பெண்ணின் அந்தரங்க பகுதியை தொடுவதற்கு மருத்துவர் சென்றதைக் கண்ட அப்பெண் அதிர்ச்சியடைந்து சுதாரித்துக்கொண்டதோடு, மருத்துவரின் கையை தட்டிவிட்டு வெளியே ஓடிவந்து தனது காருக்குள் அமர்ந்து கொண்டு கதறியபடி கணவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனே விரைந்து வந்த கணவர் மருத்துவரை கன்னத்தில் அறைந்ததோடு, மருத்துவர் மீது புகார் செய்த நிலையில், மருத்துவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading