World

சிங்கப்பூரில் பாத்திரம் கழுவ ஊழியருக்கு 4000 டொலர் சம்பளம்!

சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள ஒரு ஜப்பானிய உணவகம் ஒன்று பாத்திரம் கழுவ ஒரு ஊழியருக்கு 3,500 சிங்கப்பூர் டொலர் மாதச் சம்பள வழங்குவதாக தெரியவந்துள்ளது.

ஆனாலும் வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லையாம். அதனால் சம்பளத்தை உயர்த்த வேண்டி உள்ளது. சம்பளத்தை அதிகரித்த பிறகும், வேலைக்கு ஆள் அமர்த்த கிட்டத்தட்ட ஒரு மாதம் மேல் எடுத்துள்ளது.

பெரும்பாலும் சிங்கப்பூர் மக்கள் யாரும் பாத்திரம் கழுவும் வேலை பார்க்க முன்வருவதில்லை. இதனால் வெளிநாட்டு ஊழியர்களை வைத்தே அது போன்ற வேலைகளை செய்கின்றனர்.

கொரோனா சூழ்நிலையால் பல வெளிநாட்டவர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பினர். இதோடு வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் கொள்கையும் சிங்கப்பூர் அரசாங்கம் முடக்கியது. 

இதனால் உணவு நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை எடுக்க திண்டாடுகின்றனர்.

இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க சில உணவகங்கள் பாத்திரம் கழுவும் பணியை மற்ற நிறுவனங்களுக்குக் கொடுக்கின்றன. 

8 மணி நேரம் தட்டு கழுவ,  ஒவ்வொரு ஊழியருக்கும் 3,800 சிங்கப்பூர் டொலரிலிருந்து  4,000 சிங்கப்பூர்  டொலர் மாதச் சம்பளம் அளிக்கின்றன.

சில கடிமான வேலை பளு கொண்ட பணிகளுக்கு இதனை விட ஊதியம் குறைவாக உள்ள நிலையில், ஏன் இந்த வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்ற சந்தேகம் முதலாளிகள் மத்தியில் எழுந்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading