Local

சினோபார்ம்  தடுப்பூசிக்கு  இலங்கை ஏன் அதிக விலை  செலுத்துகிறது?

உயர்தர கொவிட் -19 தடுப்பூசிகளை குறைந்த விலையில் கொள்வனவுச் செய்யக்கூடிய சீனத் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசிக்கு ஏன் அதிக விலை கொடுக்கப்படுகிறது என அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் அரசாங்கத்தை கேள்வி எழுப்பியுள்ளது
.
இலங்கை மற்றும் உலகெங்கிலும் மிகவும் விரும்பப்படும் பைஷர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு பதிலாக சீன தடுப்பூசிகள் அதிக விலைக்கு கொள்வனவு செய்வது ஆச்சரியமாக இருக்கிறது என சங்கம் தெரிவித்துள்ளது.
பொது நிதி பயன்படுத்தப்படுவதால், இதுபோன்ற முடிவின் காரணத்திற்காக அதிகாரிகள் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என அச்சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
உலகின் ஏனைய இடங்களில் சினோபார்ம் தடுப்பூசியானது ஒரு டோஸுக்கு 10 முதல் 14 டொலருக்கு கொள்வனவு செய்யப்படுகிறது. அதே நேரத்தில் இலங்கை தடுப்பூசியை 15 டொலருக்கு கொள்வனவு செய்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 22 மில்லியன் தடுப்பூசிகளில் 17 மில்லியன் தடுப்பூசிகள் சீனாவிலிருந்து வந்தவையாகும்.
மத்திய கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகள் பயண நோக்கத்திற்காக பைஷர் தடுப்பூசியை அங்கீகரிக்கிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading