Gossip

சிறுமியை மிரட்டி 8 முறை கருமுட்டை விற்பனை செய்த தாயின் காதலன்!

ஈரோடு மாவட்டம் மாநகர் பகுதியை சேர்ந்த கணவரை இழந்த 38 வயதுடைய பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார். அதன்பின்னர், 40 வயதான பெயிண்டர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளத்தொடர்ப்பாக இருந்துள்ளது.

அவருடனே குடும்பமும் நடத்தி வந்துள்ளார். தொடர்ந்து சிறுமியின் தாய் மருத்துவமனையில் தனது கருமுட்டையை விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை செலவு செய்து வந்துள்ளனர்.

அதன் பின்னர் சிறுமியையும் கருமுட்டை விற்பனை செய்வதில் ஈடுபடுத்த அவர்கள் திட்டமிட்டனர். இதனால் சிறுமியின் 12 வயதில் இருந்தே கருமுட்டை விற்பனைக்காக சிறுமியை தாயின் கள்ளக்காதலன் தயார் செய்து வந்தார்.

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
இதுமட்டுமின்றி சிறுமிக்கு பாலியல் ரீதியாகவும் தொல்லைக்கொடுத்து பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். கருமுட்டை விற்பனை செய்து பணம் சம்பாதிப்பதற்காக சிறுமியின் தாயும் அதற்கு சம்மதித்து உள்ளார்.

கருமுட்டையை விற்பனை செய்ய வயது முக்கியம் என்பதால் போலி ஆவணங்களை தயார் செய்து சிறுமியை அவரது தாயும், மாலதியும் அழைத்து சென்று கருமுட்டையை விற்பனை செய்து உள்ளனர்.

மேலும், கருமுட்டை கொடுத்த சிறுமிக்கு ஒவ்வொரு முறையும் ரூ.20 ஆயிரமும், புரோக்கராக செயல்பட்ட மாலதிக்கு கமிஷனாக ரூ.5 ஆயிரமும் ஆஸ்பத்திரியின் சார்பில் வழங்கப்பட்டு உள்ளது.

இதேப்போன்று சிறுமியை 8 முறை கருமுட்டையை கொடுக்க வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சிறுமி மன வேதனை அடைந்து சேலத்தில் தெரிந்தவர்களின் வீட்டிற்க்கு சென்றுள்ளார்.

அதனை அறிந்துகொண்ட தாய் மற்றும் கள்ளக்காதலன் சிறுமியை மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் அழைத்தனர். ஆனால் சிறுமி அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

இதன் பின்னர் சிறுமியின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, விசாரணையில் சிறுமியின் தாய், தாயின் கள்ளக்காதலன், மாலதி ஆகிய 3 பேர் மீது போக்சோ உள்பட 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை நேற்று கைது செய்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading