Up Country

பிறந்த நாளன்று சிறுமி மீது வன்கொடுமை! – வெள்ளவாயாவில் காமுகன் கைது

ஏழு வயது நிரம்பிய சிறுமியின் பிறந்த தினத்தன்று, அச்சிறுமியை பாலியல் வல்லுறவிற்குற்படுத்திய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரை, வெள்ளவாயா பொலிசார் இன்று (27) கைதுசெய்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி, வெள்ளவாயா அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

வெள்ளவாயா நகர்ப்பகுதியில், குறிப்பிட்ட சிறுமிக்கு பிறந்த தின நிகழ்வு இடம்பெற்றது. அவ்வேளையில் அவ் வீட்டிற்கண்மையிலான அயல் வீட்டில் இருந்து வரும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரும் பிறந்த தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

அதையடுத்து, அச்சிறுமியை தமது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அச்சிறுமியை பாலியல் வல்லுறவிற்குற்படுத்தியுள்ளானென்று, சிறுமியின் பெற்றோர் வெள்ளவாயா பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இப்புகாரின் பேரில் அக்காமுகன் வெள்ளவாயா பொலிசாரினால் கைது செய்யப்பட்டான். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் வைத்திய அறிக்கையோடு கைது செய்யப்பட்டவன்,

வெள்ளவாயா மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவானென்று, பொலிசார் தெரிவித்தனர்.

தொடர்ந்தும் வெள்ளவாயா பொலிசார் தீவிர புலன் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading