சிறையில் உள்ள கணவன் மூலம் குழந்தை பெற விரும்பிய மனைவி பரோல் வழங்கிய நீதிமன்றம்!

சிறையில் உள்ள கணவன் மூலம் குழந்தை பெற மனைவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த ராஜஸ்தான் நீதிமன்றம் கணவனுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-9309199409784490&output=html&h=343&adk=1564593968&adf=2311946703&pi=t.aa~a.1729181913~i.1~rp.4&w=412&lmt=1649661531&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=2506020519&psa=1&ad_type=text_image&format=412×343&url=https%3A%2F%2Fwww.kumudam.com%2Fnews%2Fnational%2F42483&fwr=1&pra=3&rh=335&rw=402&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1649661531608&bpp=23&bdt=5103&idt=-M&shv=r20220406&mjsv=m202203300101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Db1bdb8e691f5be12-22d0c65711cb009f%3AT%3D1629634256%3ART%3D1629634256%3AS%3DALNI_MaclHQD7dh-j53RXzjJtWSurBSpHA&prev_fmts=0x0&nras=2&correlator=1928515629141&frm=20&pv=1&ga_vid=708734233.1629634257&ga_sid=1649661530&ga_hid=291102284&ga_fc=1&u_tz=330&u_his=1&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_sd=1.75&dmc=2&adx=0&ady=812&biw=412&bih=787&scr_x=0&scr_y=0&eid=44759876%2C44759927%2C44759837%2C31065787%2C31060475&oid=2&pvsid=3409929528509952&pem=340&tmod=1623507509&uas=0&nvt=1&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=1152&bc=31&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=G6Ul46XbvY&p=https%3A//www.kumudam.com&dtd=90
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்தவர் நந்த்லால். கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இவர், ஆயுள் கைதியாக தண்டனி அனுபவித்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மானைவி உள்ளார்.
இந்நிலையில், தன் கணவருடன் தாம்பத்ய உறவில் ஈடுபடவும், குழந்தை பெற்றுக் கொள்ளவும் கணவருக்கு பரோல் அளிக்க வேண்டும் என்று ரேகா ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
முன்னதாக மாவட்ட நீதிமன்றத்தில் அவர் அளித்திருந்த மனுவில் நீதிமன்றம் முடிவு ஏதும் செய்யாமல் இருந்தது. இதையடுத்து ரேகா உயர்நீதிமன்றட்த்தை நாடினார்.
குழந்தை பெற்றுக் கொள்வது என்பது அரசியலமைப்பு சட்டம் அளித்த உரிமை மற்றும பல்வேறு மதங்களின் கோட்பாடுகளை குற்றவாளி நந்த்லாலின் மனைவி தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதிகள் பர்சாந்த் அலி மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரித்தது. முடிவில் ரேகாவின் கணவர் நந்த் லாலுக்கு 15 நாட்கள் அவசர பரோலை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
