Local

சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ள நாடுகள்!

உலகின் பெரும்பாலான நாடுகளை சீனா கடன் வலையில் சிக்க வைத்துள்ளதாக அமெரிக்க திரைசேறி செயலாளர் ஜேனட் யெலன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜேனட் யெலன் ஒரு பொறுப்பற்ற அறிக்கையை வெளியிட்டதாக சீனா கூறுகிறது.

கடந்த புதன்கிழமை, அமெரிக்க திரைசேறி செயலாளர், உலகெங்கிலும் சீனாவின் செயல்பாடுகள், குறிப்பாக கடன் வழங்கும் செயல்முறை மீது ஒரு கண் வைத்திருப்பதாகக் கூறினார்.

அமெரிக்க சட்டமன்ற பிரதிநிதிகள் குழுவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். வாஷிங்டன் சீனாவின் செல்வாக்கை, குறிப்பாக சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வளரும் நாடுகளில் கட்டுப்படுத்துவதில் ஆழ்ந்த உறுதியுடன் உள்ளது.

கடந்த காலங்களில், உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக வளரும் நாடுகளுக்கு சீனா பில்லியன் டொலர்களை கடனாக வழங்கியது. ஆனால், 2016க்குப் பிறகு கடன் கொடுப்பது படிப்படியாகக் குறைந்தது.

கடனில் உருவாக்கப்பட்ட பல திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. இதனால் பல நாடுகளுக்கு கடனை திருப்பி செலுத்துவது கடும் நெருக்கடியாக மாறியுள்ளது.

ஆனால் அமெரிக்க மத்திய வங்கி எதிர்பாராதவிதமாக கொள்கை வட்டி விகிதங்களை உயர்த்தியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சீனா குற்றம் சாட்டுகிறது.

சீனா, ஜாம்பியா, கானா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் தங்கள் கடன்களை மறுசீரமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால், இதற்கு சீனா பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்குப் பதிலளித்த சீனா, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியமும் கடன் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading