World

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி ஓட்டல் பணியில் ரோப்போக்கள்!

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது. அங்கு கொரோனா பரவாமல் போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற சீன அரசு பீஜிங் நகருக்குள் இன்னொரு நகரத்தை கட்டமைத்து உள்ளது.

ஓட்டலில் ஊழியர்கள் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. வீரர்கள் தங்கள் அறைகளில் இருந்து கொண்டே உணவை ஆரடர் செய்யும் வசதி உள்ளது. ஆரடர் செய்த உணவை ரோபோ கொண்டு வந்து அவர்கள் தங்கியிருக்கும் அறையின் வாசலின் வெளியே வந்து நிற்கும். 

பின்னர் வீரர்கள் கதவை திறந்து, பின் நம்பரை டைப் செய்த பின்பு, ரோபோ உணவை அவர்களிடம் அளித்துவிட்டு சென்றுவிடும். அதேப் போல் அறையின் கூரையிலிருந்து உணவை டெலிவரி செய்யும் முறையும் பயன்பாட்டில் உள்ளது.

சீனாவில் தற்போது கடுமையான கொரோனா கால கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading