Local

சுற்றாடல் அமைச்சு – வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

சுற்றாடல் அமைச்சர் பதவியினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்.

முன்னதாக சுகாதார அமைச்சர் பதவியினை வகித்த நசீர் அஹமட் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுற்றாடல் அமைச்சை ஜனாதிபதியின் கீழ் பராமரிப்பது தொடர்பில் பிரதமரிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக சோஷலிஸக் குடியரசின் அரசிலமைப்பு 44(3) பிரிவின் படி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுற்றாடல் அமைச்சை ஜனாதிபதியின் கீழ் பராமரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தாலும் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading