Local

சு.கவில் மஹிந்தவுக்கு கூடுதல் அதிகாரம்! – நாளை கூடுகின்றது மத்திய குழு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைப்புச் செய்வது குறித்த முக்கியமான செயற்குழுக் கூட்டம் நாளை வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

நாளை பிற்பகல் 4 மணியளவில் பத்தரமுல்லவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொள்ளவுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் கூட்டங்களில் பங்கேற்பதை சிலகாலமாக தவிர்த்து வந்த மஹிந்த, இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பது முக்கிய அம்சமாகும்.

இந்த செயற்குழுக் கூட்டத்தில் கட்சியை மறுசீரமைப்பது மற்றும் கட்சியின் யாப்பில் திருத்தங்களைச் செய்வது குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஷ தெரிவித்துள்ளார்.

மஹிந்தவுக்கு கட்சியில் கூடுதல் பொறுப்பை அளிக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading