World

சொர்க்கத்தில் சந்திப்போம் அம்மா உக்ரைனில் கொல்லப்பட்ட தாயாருக்கு 9 வயது மகள் எழுதிய கடிதம்!

உக்ரைன் போரில் கொல்லப்பட்ட தாயாருக்கு அவரின் 9 வயது மகள் உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 45 நாட்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்த போர் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அந்த வகையில் காரில் 9 வயது மகளுடன் சென்ற போது இளம் தாயார் ஒருவர் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அவர் உக்ரைனில் எந்த இடத்தில் கொலை செய்யப்பட்டார் என்ற விபரம் தெரியவில்லை. இந்நிலையில் உக்ரைன் போரில் கொல்லப்பட்ட தனது தாய்க்கு 9 வயது சிறுமி எழுதிய உணர்ச்சிகரமான கடிதம் வெளியாகியுள்ளது.

அதில், நீங்கள் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். நாம் மீண்டும் சொர்க்கத்தில் சந்திப்போம் அம்மா. உங்களைக் காணச் சொர்க்கத்திற்கு வர என்னால் முடிந்த வரை நல்ல பெண்ணாக இருக்க முயல்வேன்.

எனது குழந்தைப் பருவத்தில் நீங்கள் என்னுடன் இருந்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நீங்கள் தான் உலகிலேயே மிகச் சிறந்த அம்மா. நான் உங்களை ஒருபோதும் மறக்க மாட்டேன்.

உங்களுக்கு என் முத்தங்கள் என எழுதியுள்ளார். இந்த கடிதத்தை உக்ரேனிய எம்.பி லிசியா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading