Local

ஜனாசாக்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடியில் இடநெருக்கடி!

கொரோனா மரணங்களின் அதிகரிக்கும் நிலையில், ஜனாசாக்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி, மஜ்மா நகர் பகுதியில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனால், கொரோனா மரண ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு மாற்று இடமொன்றில் அடக்கம் செய்வதற்கான அனுமதி அவசரமாக கோரப்பட்டிருந்தது.

கொரோனா ஜனாசா அடக்கம் செய்ய பகுதியை சாப்பமடு எனும் பகுதிக்கு மாற்றுவதற்கு பரிந்துரைக்குமாறு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையடுத்து, தற்போது ஓட்டமாவடிக்கு பகுதிக்கு பதிலாக பிறிதொரு இடத்தில் ஜனாசா அடக்கம் செய்வது தொடர்பில் சுகாதார பிரிவினர் ஆலோசித்து வருகின்றனர்.

ஓட்டமாவடி மையவாடியில் இன்று முதலாம் திகதி வரை 1280 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading