Local

ஜனாதிபதி பதவி விலகவேண்டும் அல்லது மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வொன்றை முன்வைக்க வேண்டும்!

தற்போது அதிகார மையம் என்பது இந்த இளைஞர்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களின் கரங்களில் காணப்படுகின்றது.

ஜனாதிபதி பதவி விலகவேண்டும் அல்லது மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை முன்வைக்கவேண்டும் என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க  நாட்டில் தற்போது அதிகாரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் இளைஞர்களின் கரங்களிற்கு சென்றுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்

சிஎன்பிசிக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உங்களால் எங்களிற்கு வர்ணிக்க முடியுமா? தற்போதைய நிலை எவ்வாறானதாக உள்ளது என நீங்கள் கருதுகின்றீர்கள்? பொருளாதார நெருக்கடி  எவ்வளவு மோசமானதாக காணப்படுகின்றது ? மக்கள் எதிர்நோக்கும் பிரச்சிகைள் எவ்வாறானதாக உள்ளன?

பதில்- பொருளாதார நெருக்கடி மிகமிக மோசமானதாக காணப்படுகின்றது-இந்த மாத முடிவில் எங்கள் கையிருப்புக்கள் முடிவடையும் என நான் கருதுகின்றேன்.

இந்தி;யாவிடமிருந்து எங்களிற்கு கடன் கிடைத்தது – எரிபொருளிற்கான கடன் மே இரண்டாவது வாரத்தில் முடிவடைந்துவிடும்- ஏனைய பொருட்களிற்கான இந்தியாவின் கடனுதவி மேமாத இறுதியில் முடிவடைந்துவிடும்.

சிலர் மேமாத ஆரம்பத்தில் முடிவடைந்துவிடும் என கருதுகின்றனர் சிலர் இறுதியில் என எதிர்பார்க்கின்றனர்.

ஜூன் மாதமளவில் தனியார் துறையினரிடம் அவர்கள் செயற்படுவதற்கான அந்நியசெலாவணியிருக்காது-நிலைமை இவ்வளவு பாரதூரமானதாக காணப்படுகின்றது.

நெல்விளைச்சல் குறைவாகவே காணப்படும்,வெளிநாட்டிலிருந்து நெல்லை இறக்குமதி செய்வதற்கு போதுமான  பணம் இருக்குமா என்பது தெரியவில்லை.
மத்தியதரவர்க்கம் வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளது விவசாயிகள் வீழ்ச்சியை எதிர்கொள்கின்றனர்-அவர்களால் உரங்களை பெற முடியாது.

அரசாங்க ஊழியர்கள் உட்பட அனைவரும் வீதிக்கு வந்துள்ளனர்- ஆர்ப்பாட்டங்களிற்கு இளைஞர்களே தலைமை தாங்குகின்றனர்.
கொழும்பிலும் கண்டியிலும் சனிக்கிழமை பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன – ஆர்ப்பாட்க்காரர்கள் தற்போது காலிமுகத்திடலில் ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு வெளியே முகாமிட்டுள்ளனர்.
தற்போது அதிகார மையம் என்பது இந்த இளைஞர்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களின் கரங்களில் காணப்படுகின்றது-

நாடாளுமன்றம் தனது அதிகாரம் இந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இளைஞர்களின் கரங்களிற்கு செல்வதை உணர்கின்றது.
ஜனாதிபதி அரசாங்கத்தை அமைக்க முயல்கின்றார் ஆனால் இறுதி முடிவு தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலைமையிலிருந்து விடுபடுவதற்கான வழி என்ன?

ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்ற வேண்டுகோள் காணப்படுகின்றது ஜனாதிபதி பதவி விலகவேண்டும் அல்லது அவர் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை முன்வைக்கவேண்டும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading