Local

ஜனாதிபதி பதவி விலக கோரி ஹட்டனில் வீதி மறியல் போராட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் ஹட்டன் நகரில் இன்று காலை வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன.

ஹட்டன் நகரில் டெலிகோம் முன்பாகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. பயணிகள் பெரும் சிரமங்களுக்குள்ளாகியிருந்தனர்.

டயர்களை வீதிகளில் எரித்து, தமது எதிர்ப்பை வெளியிட்டனர். அட்டன் நகரிலுள்ள பல வர்த்தகர்கள் கடைகளை மூடி தமது ஆதரவை வழங்கினர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading