Local

ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகுமாறு இலங்கைத் திருச்சபை கோரிக்கை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை  உடனடியாக பதவிவிலகுமாறு   இலங்கைத் திருச்சபை கோரிக்கை விடுத்துள்ளது

பதவியில் இருந்து வெளியேறி  இலங்கை மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை மீளப் பெறக்கூடிய உண்மையான இடைக்கால அரசாங்கத்தை  உருவாக்குமாறும் இலங்கைத் திருச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைத் திருச்சபை  விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு  ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும்  நாட்டை ஆட்சி செய்வதற்கு  ஜனாதிபதிக்கு மக்கள்  ஆணை  இல்லை என்பதனை போராட்டங்கள்  தெளிவாக பிரதிபலித்துள்ளதாகவும்  அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading