World

ஜனாதிபதி மாளிகைக்குள் நடந்த பாலியல் வண்புனர்வு சம்பவம்!

பிரான்சில் ஜனாதிபதி மாளிகைக்குள் பாலியல் வண்புனர்வு சம்பவம் நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

பிரான்சில் இருக்கும் ஜனாதிபதி மாளிகையான எலிசே (Élysée) மாளிகையில், ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக, ஜனாதிபதி மாளிகையில் தங்கியிருக்கும், இராணுவ வீரர் ஒருவர், தனது சக இராணுவ வீராங்கனையைப் பாலியல் வண்புணர்வு செய்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஓய்வு விருந்து உபசார விழாவின் போது, இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் அப்பெண் உடனடியாக இது குறித்து பொலிசில் புகார் பதிவு செய்துள்ளார்.

இருப்பினும் தன் மீது பிரச்சினைகள் வரும் என்பதால் மேலதிக விசாரணைகள் வேண்டாம் எனவும் கோரி உள்ளார்.

ஆனால் இந்தச் சம்பவம் ஜனாதிபதி மாளிகை நிர்வாகத்திற்கு தெரியவந்ததால், குற்றவாளியான இராணுவ அதிகாரி சத்தம் இல்லாமல் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

இன்னும் ஒரு சக அதிகாரி இந்தச் சம்பவத்திற்கு சாட்சியமாக இருந்ததின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading