Local

ஜனாதிபதி ரணிலுக்கு கிடைக்கவுள்ள அதிகாரம்!

தற்போதைய பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதிக்கு கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவித்தால், கட்டாயம் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு இன்னும் அதிகாரம் இல்லை என்றும் மார்ச் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னரே பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அவருக்கு உள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எனினும் பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான யோசனை பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் அதனை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading