Cinema

ஜோதிகாவுடன் அந்த விஷயம் இதுவரை நடக்கவே இல்லை!

 

தமிழ் சினிமா ரசிகர்களால், ஏன் தென்னிந்திய சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் நட்சத்திர ஜோடிகளில் சூர்யா-ஜோதிகா முக்கியமானவர்கள்.

பிரபலங்கள் திருமணம் என்றாலே ரசிகர்கள் கொண்டாடுவார்கள், ஆனால் இவர்கள் நிஜ வாழ்க்கையில் இணைந்த விஷயம் கேட்டு ஒட்டுமொத்த தமிழ்நாடே சந்தோஷப்பட்டது என்று தான் கூற வேண்டும்.

திருமணம், குழந்தை என சினிமாவில் இருந்து விலகிய ஜோதிகா இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் கங்குவா புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா பேசும்போது, திருமணத்திற்கு பிறகு நானும், ஜோதிகாவும் இணைந்து நடிப்பது போன்ற கதைகளை எந்த இயக்குனரும் கூறவில்லை.

நாங்கள் இணைந்து பணிபுரிவது கனவாகவே உள்ளது, கண்டிப்பாக அது நிறைவேறும் என நம்புவதாக பேசியுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading