Lead NewsLocal

தண்டனையை ஏற்க தயார் – நாமல் குமார அறிவிப்பு!

போலி ஆவணங்களை சமர்ப்பித்து தான் இராணுவத்தில் இணைந்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு, தண்டனை வழங்கப்பட்டால் அதற்கு முகம் கொடுக்க தயார் என்று நாமல் குமார தெரிவித்தார்.

வரக்காபொலயில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நாமல் குமார என்பவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து இராணுவத்தில் இணைந்து, பயிற்சியின்போது தப்பியோடியவர் என்று சி.ஐ.டியினர் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

இது குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

” நான் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து படைப்பிரிவுகளில் பயிற்சிப் பெற்றதாக நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் உண்மையானவை.

அதற்காக வழங்கப்படுகின்ற தண்டனையை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றேன்.
அதேநேரம், நாட்டின் ஜனாதிபதியை கொலை செய்வதற்காக இடம்பெற்ற சூழ்ச்சியும் உண்மையானது.;’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading