Cinema

தந்தையின் 80 ஆவது பிறந்தநாளுக்கு வராத நடிகர் விஜய் மகனுக்காக அர்ச்சனை செய்த தந்தை!

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் 80 வயது பூர்த்தியடைந்ததை முன்னிட்டு தரிசனம் செய்தபோது, தனது மகன் நடிகர் விஜய்க்காக அர்ச்சனை செய்து வேண்டிக் கொண்டார்.

தமிழில் பிரபல இயக்குனரும், முன்னணி நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது 80 பிறந்தநாளை கொண்டாடினார்.

விஜய் திரையுலகில் சாதித்த பின், அவரது தந்தையுடன் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அரசியல் காரணமாக தான் தந்தை-மகன் இடையில் உரசல் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் வெவ்வேறு வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகரின் எண்பதாவது பிறந்த நாள் விழா சமீபத்தில் அவரது வீட்டில் நடந்தது. ஆனால் நடிகர் விஜய் அதில் கலந்துகொள்ளவில்லை. அவரது தாயார் எஸ்.ஏ.சந்திரசேகருடன் இணைந்து கேக் வெட்டிய காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.

தந்தையின் பிறந்தநாளுக்கு கூட விஜய் வரமாட்டாரா என பலரும் கடுமையாக விமர்சித்தனர். அதனைத் தொடர்ந்து, திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிரகடேஸ்வரர் கோவிலில் எஸ்.ஏ.சந்திரசேகர், தனது 80வது பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம் செய்தார்.

அத்துடன் மகன் விஜய் பெயரில் அர்ச்சனை செய்து வேண்டிக் கொண்டார். தொடர்ந்து கடவுள் சன்னதிகளுக்கு சென்ற அவர் சாமி தரிசனம் செய்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading