Local

தனது மார்பகங்களை கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார் ஹிருணிகா!

தனது மார்பகங்கள் குறித்து பெருமைப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். அந்த பதிவில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,

என் மார்பகங்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்! நான் மூன்று அழகான குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தேன். நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, என் முழு உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன்.

எப்படியும் நீங்கள் பேசி, மீம்ஸ் செய்து, என் மார்பகங்களைப் பற்றி சிரித்து முடித்ததும், வரிசையில் இன்னொரு குடிமகன் உயிரிழந்துவிட்டார் என்பது  உங்களுக்குத் தெரியும் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடத்தப்பட்ட போராட்டத்தின் போது சிலர் அவரது மார்பகங்களை கேலி செய்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading