Local

தனிமையில் இருந்த 78 வயது மூதாட்டி துஷ்பிரயோகம் செய்து படுகொலை!

காங்கேசன்துறை – கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உள்படுத்திய பின் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். சாணை தவமணி (வயது-78) என்ற மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டார்.

மூதாட்டியின் சடலம் யாழ்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்ட பின் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தொடர்பில் ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் விரைவில் கைது செய்யப்படுவார் என்று பொலிஸார் கூறினர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading