Local

தனியார் துறையில் பாரிய தொழில் இழப்புகள் ஏற்படும் கொழும்பு வர்த்தகர் சங்கம்!

தனியார் துறையில் பாரிய தொழில் இழப்புக்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக கொழும்பு வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் சமிந்த விதானகமகே இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனியார் துறையில் தற்பொழுதும் பாரிய தொழிலின்மை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஒளடதங்களுக்கு பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை கொள்வனவு செய்வதற்கு மக்களிடத்தில் பணமும் பற்றாக்குறையாக காணப்படுகின்றது

ஏனெனில் மக்கள் தொழிலை இழந்துள்ளமையே இதற்கு பிரதான காரணமாகும் என கொழும்பு வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் சமிந்த விதானகமகே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading