Sports

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான தடைகளை நீக்குவதற்கு நடவடிக்கை

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை முழுமையாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை கிரிக்கெட்டினால் நியமிக்கப்பட்ட சுயாதீன விசாரணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் பின்னர் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக கிரிக்கெட் தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும், அவுஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த குற்றச்சாட்டில் இருந்து தனுஷ்க குணதிலக்க விடுவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை முழுமையாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading