World

தன்சானிய நாட்டில் தேவாலயத்தில் நடந்த சன நெரிசலில் சிக்கி 20 பேர் பலி பலர் படுகாயம்

தன்சானியா நாட்டின் மோஷி நகரிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று இரவு பிரார்த்தனை கூட்டமொன்று நடந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வழிபாட்டாளர்கள் ஆசீர்வதிக்கப்பட்ட எண்ணையால் அபிஷேகம் செய்ய விரைந்து வந்தபோது திடீரென சன நெரிசல் ஏற்பட்டது. இந்த சன நெரிசலில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் படு காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் என்றும் நெரிசலில் சிக்கி காயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்ககூடிய வாய்ப்புள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading