Gossip

தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட இளைஞன்!

மணப்பெண் திடீரென திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் பிரேசில் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

பிரேசில் நாட்டின் பஹியாவைச் சேர்ந்தவர் டியோகோ ரபேலோ. இவருக்கும் விட்டர் புவெனோ என்ற பெண்ணிற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து டியோகோ தனது திருமண வேலைகளில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் டியோகோ மற்றும் ரபேலோ ஆகிய இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து டியோகா உடனான திருமணத்தை ரபேலோ ரத்து செய்ய முடிவெடுத்து அவரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் முதலில் அதிர்ச்சியடைந்த டியோகோ பின்னர் திட்டமிட்டபடி திருமணத்தை நடத்த முடிவெடுத்தார்.

அதன்படி அவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வதாக தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் பஹியாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் டியோகோ தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார்.

அவரின் இந்த திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள் என 40 பேர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading