Features

2ஆம் உலகப்போரில் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டுகள்!

1945 ஆகஸ்ட் 6 ஆம் திகதி ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது உலகின் முதல் அணுகுண்டு வீச்சை நடத்தியது அமெரிக்கா. இதில் 1.40 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டுக்கு #லிட்டில்_பாய் எனப் பெயர் சூட்டியிருந்தனர்.

முந்தைய அதிபர் ரூஸ்வெல்ட்டைக் குறிக்கும் வகையில் இந்தப் பெயர் வைக்கப்பட்டதாகத் தெவிக்கப்பட்டது. 12-15 ஆயிரம் டன் டி.என்.டி. வெடி பொருள் சக்தியை கொண்டிருந்த அந்த அணுகுண்டு உள்ளூர் நேரப்படி காலை 8:15 மணிக்கு எனோலா கே என்ற அமெரிக்க B-29 விமானத்திலிருந்து வீசப்பட்டது. 13 சதுர கிலோ மீட்டர் பரப்பை அந்த அணுகுண்டு நாசம் செய்தது. குண்டு விழுந்த இடத்திலிருந்து 500 அடி சுற்றளவில் இருந்த அனைவரும் உடனடியாக உயிரிழந்தனர். ஹிரோஷிமாவில் இருந்த 60 சதவீத கட்டடங்கள் உடைந்து சிதைந்தன.

இந்த குண்டு வீச்சு நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு நாகசாகி நகரத்தின் மீது மீண்டும் ஒரு அணுகுண்டு வீசப்பட்டது. அந்த குண்டின் பெயர் #பேட்_மேன் இதனால் 74,000 பேர் கொல்லப்பட்டனர்.

இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்ட பின் 1945 ஆக்ஸட் 8 ம் திகதி ஜப்பான் மீது சோவியத் ரஷ்யா போர்ப் பிரகடனம் செய்ததும் ஜப்பானுக்கு வேறு வழியில்லாமல் போனது. இதயைடுத்து அதே மாதம் 14 ஆம் திகதி நேச நாடுகளிடம் சரணடைந்தது ஜப்பான்.

இந்த அணுகுண்டு வீச்சின் காரணமாக ஆசியாவில் உலகப் போர் சட்டென முடிவுக்கு வந்தது. ஆனால் குண்டை வீசுவதற்கு முன்பாகவே ஜப்பான் சரணடையும் நிலையில் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading