தன்னை தானே திருமணம் செய்ய இருக்கும் முதல் இந்தியப் பெண்!

டிஜிட்டல் உலகில் தினமும் ஏதோ ஒரு விசித்திரமான விஷயங்களை நாம் கடந்துதான் வருகிறோம், அவற்றில் சில விஷயங்கள் நம்மை நெகிழ வைக்கும், சில செய்திகள் ஆச்சரியப்பட வைக்கின்றன.
அந்த வகையில் குஜராத் மாநிலம் வதோதராவில் 24 வயதான பிந்து என்ற இளம்பெண் தன்னை தானே திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். அதாவது, வரும் ஜூன் 11 ஆம் திகதி அவருக்கு சுய-திருமணம் நடைப்பெற்றவுள்ளது.
சில சோகமான தருணங்களில்
யாரோ கூடவே வருவார்
யாரோ பாதியில் போவார்,
அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே!
என்று BGM போட்டு வாழ்க்கையில் பயணித்திருப்போம் , கடைசி வரை நமக்கு நாம் தான் என்று யோசித்திருப்போம், ஆனால் சுய திருமணம் செய்யும் அளவிற்கு யாரும் யோசித்திருக்கமாட்டோம்.
எனினும், அப்படி தான் பிந்து என்ற இளம்பெண் பெற்றோர்கள் சமத்துடன் தன்னை தானே திருமணம் செய்துக்கொள்ளவுள்ளார். கேட்டாலே ஆச்சரியமாக இருக்கிறதா?
சுய திருமணம் குறித்துப் பிந்து,
“சிலர் விரும்பிய ஒருவரைத் திருமணம் செய்துகொள்கிறார்கள், ஆனால் நான் என்னைத் தான் நேசிக்கிறேன்” என்று கண்டேன் காதலைப் படத்தில் தமன்னா “I Love Myself” என்று சொல்வதைப் போன்று பிந்து கூறுகிறார்.
மேலும் அவர் “நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை, ஆனால் நான் மணமகள் ஆக விரும்பினேன்”, அதனால் என்னை நானே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார். இதோ முடியவில்லை பிந்துவின் திருமண திட்டம், தேனிலவிற்குக் கோவா இரண்டு வாரம் செல்லவுள்ளாராம்.
இதே போன்று பிரேசிலின் மாடலான கிரிஸ் கேலரா, உகாண்டா நாட்டைச் சேர்ந்த லுலு ஆக்ஸ்ஃபோர்டு ஆகியோர் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
