தன் மனைவியை ஆண் என்று கூறிய பெண் மீது வழக்கு ! மேக்ரான் விளக்கம்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், தன் மனைவியை ஆண் என்று கூறிய பெண் மீது வழக்குத் தொடர்ந்தது எதனால் என்பதற்கு முதன்முறையாக விளக்கமளித்துள்ளார்.
மேக்ரான் மனைவியை ஆண் என விமர்சிக்கும் பெண்
கேண்டேஸ் ஓவன்ஸ் (Candace Owens) என்னும் அமெரிக்கப் பெண், ஒரு தொலைக்காட்சி பிரபலம் மற்றும் அரசியல் விமர்சகரும் ஆவார்.

இந்த கேண்டேஸ், மேக்ரானின் மனைவியான பிரிஜிட் மேக்ரானை கேலி பேசுவதையே வழக்கமாகக் கொண்டவர்.

இந்நிலையில், சென்ற மாதம் கேண்டேஸ் மீது மேக்ரான் தம்பதியர் அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்கள்.
வழக்குத் தொடர்ந்தது ஏன்?

சில விடயங்களை மறைக்கமுயன்றால், உண்மையாகவே அப்படி இருக்குமோ என மக்கள் எண்ணத் துவங்கிவிடுவார்கள். அது கூடுதல் கவனத்தை ஈர்க்கத் துவங்கிவிடும். அதற்கு Streisand effect என்று பெயர்.
ஆகவே, அப்படி ஒரு நிலை ஏற்படவேண்டாம் என்பதற்காக தாங்கள் கேண்டேஸ் மீது வழக்குத் தொடராமல் விட்டதாகத் தெரிவித்துள்ள மேக்ரான், ஆனால், அந்த விடயம் அளவுக்கு மீறி கவனம் ஈர்த்துவருவதைத் தொடர்ந்து அது குறித்து விளக்கமளிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இந்த விடயம் பெரும் பிரச்சினையாகியுள்ளதால் நாங்கள் அதற்கு விளக்கமளிக்கவேண்டியதாயிற்று என்று கூறியுள்ள அவர், அது உண்மை மதிக்கப்படுவதைக் குறித்தது என்றும் கூறியுள்ளார்.

You must be logged in to post a comment.