தமிழ்நாடு அரசியல் கொந்தளிப்பு! இலங்கை தமிழர்களுக்கு விடிவு கிடைக்குமா?
தமிழ்நாடு கொந்தளித்தாலும் இலங்கை தமிழர்களுக்கு விடிவு கிடைக்காது. எனினும், இலங்கையில் தமிழ் மக்களுக்கான உரிமையை பெற்று கொடுக்க நினைத்தால், அது இந்தியாவால் மட்டுமே சாத்தியமாகும் . புலிகளின் தலைவருடைய போராட்டம் என்னை பொது வாழ்வியலுக்கு கொண்டு வந்தது. ஈழத் தமிழர்களுடைய அரசியல் வெறுமனே தமிழ்நாட்டு அரசியலை மட்டும் நம்பி இருக்க கூடாது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் பிரபாகரனுக்கு பின்னால் தமிழ் மக்களை ஒன்றிணைக்க கூடிய தலைவர் ஒருவரை இனம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஈழத் தமிழர்கள் ஒரு தலைமையில் ஒரு தேசமாக ஒன்றுபட்டு தமிழர் பிரச்சினையை கையாள வேண்டும்.
யாழ்ப்பாணம் – நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே என இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் இதனைத் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.