Local

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் விடுவிப்பு

வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் மூவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38 வயதான அருமைநாயகம் புருஷோத்தமன், மட்டக்களப்பைச் சேர்ந்த 53 வயதான வீரக்குட்டி கமலநாதன் மற்றும் லிந்துலை – பம்பரகலையைச் சேர்ந்த 38 வயதான கணேசன் புஷ்பராஜ் ஆகிய மூவருமே ஒருவருட புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குத் தேவையான தொழிற்பயிற்சி உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு நிலையத்தின் வன்னி பிராந்தியப் பணிப்பாளர் தெரிவித்தார்.

பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவருக்கு மாத்திரமே தற்போது புனர்வாழ்விற்கான பயிற்சி வழங்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading