Sports

தமீம் இக்பாலுக்கு திடீர் மாரடைப்பு!!!

பங்களாதேஷ் அணியின் முன்னாள் அணித்தலைவரான தமீம் இக்பாலுக்கு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது டாக்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் நடைபெற்று வருகின்றது.

குறித்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் முகமதின் ஸ்போர்ட்டிங் கிளப் மற்றும் ஷைன்புகூர் கிரிக்கெட் கிளப் ஆகிய அணிகள் மோதின.

இந்த போட்டியின் போது தமீம் இக்பாலுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மைதானத்திற்கு விரைந்த மருத்துவக் குழு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

மேலும் விமானம் மூலம் அவரை டாக்காவிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது.

இதையடுத்து அவர் பாசிலதுன்னேசா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading